​​​​ ​​​​

 APCMS.Sharepoint.PGP - NavigationBar

முகப்பு  > கண்ணோட்டம்
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​ ​​​​ ​​​​

கண்ணோட்டம்​​​​ ​​  ​  ​ ​

நமது முன்னோடிகளின் கடுமையான உழைப்புக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்கஅரசாங்கம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.


​​முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திலிருந்து ​சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் நன்மையடைவர்.​​​​​

 

என்னென்ன நன்மைகள்?

இத்தொகுப்புத் திட்டம், முன்னோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.​​
 
 

வெளிநோயாளிப் பராமரிப்பு

பலதுறை மருந்தகங்களிலும், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும், சலுகைவிலை சேவைகளுக்குக் கூடுதலாக 50% கழிவு.​

பலதுறை மருந்தகங்களிலும், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும், சலுகைவிலை மருந்துகளுக்குக் கூடுதலாக 50% கழிவு.

  • நன்மைகள் குறித்து மேல் விவரங்களை அறிய, அன்புகூர்ந்து ​​​இங்கு ​க்ளிக் செய்யவும்​​​​​
சமூகச் சுகாதார உதவித் திட்டத்தில் (CHAS) பங்கேற்கும் தனியார் மருந்தகங்களிலும் பல் மருந்தகங்களிலும் நிதியுதவிகளைப் பெற்று மகிழுங்கள். சாஸ் (CHAS) மருந்தகத்திற்குச் செல்லும்போது, உங்களுடைய முன்னோடித் தலைமுறை அட்டையை எடுத்துச் செல்லவும். நன்மைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​

சாஸ் (CHAS) குறித்தும், ஆக அண்மைத் தகவல்கள் குறித்தும் மேலும் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​​

மிதமான, கடுமையான செயல்பாட்டு இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு $1,200 ரொக்கம். திட்டம் குறித்தும், ஆக அண்மைத் தகவல்கள் குறித்தும் மேலும் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​​
 
 
 

MediShield Life

சிறப்பு சந்தா நிதியுதவிகளையும் (40% - 60%) மெடிசேவ் நிரப்புத்தொகைகளையும் ($200 - $800) கொண்டு எல்லா முன்னோடிகளுக்கான மெடிஷீல்டு லைஃப் சந்தாக்களுக்கு ஆதரவு.​​

  • ​1934 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்: சந்தாக்கள் முழுமையாகச் செலுத்தப்படும்
  • இதற்கு முன்னர் மெடிஷீல்டின்கீழ் முழுமையாகக் காப்புறுதிப் பாதுகாப்பு பெற்ற 1935க்கும் 1949க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள்: மெடிஷீல்டைக் காட்டிலும், சந்தா தொகையில் பாதியைச் செலுத்துவார்கள்​​.
எல்லா முன்னோடிகளும் மெடிஷீல்டைக் காட்டிலும், மெடிஷீல்டு லைஃப்-க்குக் குறைவான சந்தாக்களைச் செலுத்துவார்கள். சந்தா நிதியுதவிகள் குறித்தும் செலுத்தவேண்டிய தொகைகள் குறித்தும் அறிய, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​​​
         மெடிஷீல்டு லைஃப் குறித்து மேல் விவரங்களைப் பெற, அன்புகூர்ந்து இங்கு க்ளிக்        ​                செய்யவும்.​​
​​ ​
 ​
 
 

Medisave Top-ups

வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் $200 முதல் $800 வரை​
மூத்தவர்களுக்கு மேலும் அதிகம்
 
​ 
 

இயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டம்​

பின்வரும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் குறைந்தது மூன்றைச் செய்வதற்கு நிரந்தரமாக உதவி தேவைப்படும் முன்னோடிகளுக்கானது:
-  சாப்பிடுவது
-  குளிப்பது
-  ஆடை உடுத்திக்கொள்வது
-  இடம்விட்டு இடமாறுவது
-  கழிவறை பயன்படுத்துவது
-  நடப்பது அல்லது நகர்வது​​
முன்னோடிகளுக்கு அவர்களுடைய பராமரிப்புச் செலவுகளில் உதவிட, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் $100 ரொக்க உதவி. இத்திட்டம் குறித்து மேல்விவரங்களை அறிய, அன்புகூர்ந்து இங்கு​ க்ளிக் செய்யவும்.​
​​​​

யார் தகுதி பெறுகிறார்?​


பின்வரும் 2 நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சிங்கப்பூர்க் குடிமக்கள்:​
a. 1965-இல் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - அதாவது:
  • ​31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்
  • 2014-இல் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
மற்றும்
b. 31 டிசம்பர் 1986 அன்று அல்லது அதற்கு முன்னர் குடியுரிமை பெற்றவர்கள்.
முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறுபவர்கள், ஜூன் 2014-இல் ஓர் அறிவிப்புக் கடிதத்தைப் பெற்றிருப்பார்கள். அன்புகூர்ந்து, அடையாள அட்டையில் உங்களின் தற்போதைய முகவரி இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்யவும்.
அந்த இரண்டு கூறுகளில், உங்களுடைய தகுதிநிலையைச் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் இங்கு சுயமாகச் சரிபார்த்துக்கொள்ளலாம், அல்லது 1800-2222-888 என்ற முன்னோடித் தலைமுறைக்கான  தொலைபேசி எண்ணை அழைக்கலாம். ​
​ ​​